விமான பயணத்தின் போது செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதி
அளிக்கலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI)
பரிந்துரைத்துள்ளது.
தற்போது விமானத்தில் செல்லும் போது செல்போன் மற்றும்
இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் அமலில் உள்ளது. ஏனெனில்
எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும், விமானத்தில் இருக்கும்
சிக்னல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விட்டால் ஏதேனும் சிக்கல் ஏற்பட
வாய்ப்பு உள்ளது. எனவே தற்போது இந்த விதி அமலில் உள்ளது. இதனால் ஏதேனும்
பெரிய விபத்துக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால் தற்போது தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே போகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. தொழில் மற்றும் பிற பங்குதாரர்களுடன் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு டிராய் இம்முடிவை தெரிவித்துள்ளது. எனினும் ஒரு விமானம் பொதுவாக 3,000 மீட்டர் உயரத்தை 4-5 நிமிடங்களுக்குள் சென்றடைந்து விடும். எனவே நிலப்பரப்பு நெட்வொர்க்குகளுடன் இணக்கத்தன்மையை பராமரிக்க,மொபைல் தகவலுக்கான குறைந்தபட்ச உயரத் தடை 3,000 மீட்டர் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது. எனவே 3,000 அடி உயரத்திற்கும் மேல் மொபைல் சேவையை பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது.
விமான போக்குவரத்து துறைக்கு டிராய் எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து துறை விரைவில் முடிவு எடுக்கும் என தெரிகிறது. ஒரு வேளை டிராய் பரிந்தரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் விமான சேவையில் சிக்கல் ஏதும் ஏற்படா வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...