இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த,பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய அமைச்சரவை நேற்று பிறப்பித்தது.
சிவன், நாகர்கோவிலில் உள்ளவல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்னை, எம்.ஐ.டி.,யில், 1980ல், பொறியியல் பட்டம் பெற்றார்.இதன்பின், பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றார். மும்பை, ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பிலும் பட்டம் பெற்றார்.
இஸ்ரோவில், 1982ல், பணியில்சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை, இவரது பணிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.
இஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுஉள்ளார்.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...