தமிழக
அரசு, 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் போன் வழி, இணைய சேவைகளுக்கு இனி
முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளும், இணையதளங்களில்
தக்க மாற்றங்களை செய்வதுடன், மொபைல் போன் செயலிகளையும் உருவாக்கவுள்ளன.
அனைத்து அரசு சேவைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை, பொது சேவை மையங்கள் மூலம் தருவதற்கு, மத்திய அரசு, தேசிய அளவிலான கொள்கை வகுத்துள்ளது. அதையொட்டி, தமிழக அரசும், அதன் திட்டங்கள் மற்றும் சேவைகள், மக்களை வேகமாக சென்றடையும் வகையில், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப துறைக்கு, தனி கொள்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:ஐ.டி., சட்டம், 2000ல், அனைத்து அரசு சேவைகளும், மின்னணு முறையில் மக்களுக்கு தரப்பட வேண்டும். அதன்படி, வரும், 2023க்குள், அரசு சேவைகள் அனைத்தும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், பல்வேறு இணைய பயன்பாடுகள் வாயிலாகவும், மக்களுக்கு தருவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொபைல் போன்கள் பெருகியுள்ளதால், 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் வழி சேவைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, மொபைல் போன் வழியாக, அரசு சேவைகளை மக்களுக்கு வழங்க, அனைத்து அரசுத் துறைகளும் ஊக்குவிக்கப்படும்; மொபைல் போனில் பயன்பாடுகளை பெறும் வகையில், அந்தந்த துறையின், இணையதள தொழில்நுட்ப அமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அதற்கேற்ப, மொபைல் செயலிகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...