அரசு
தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி
சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைக கழகங்களின் மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை தொலைத்தால், போலீசில் புகார் அளித்து, அதற்கான உறுதி சான்று பெற வேண்டும். அந்த சான்றுடன், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் விண்ணப்பித்து, சான்றிதழ் நகல்களை பெறலாம்.
போலீசில் புகார் அளித்து சான்றிதழ் பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், பலர் சான்றிதழ் நகல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொலைந்த சான்றிதழின் நகல்களை பெற, எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காட்டினால், மாணவர்களுக்கு சான்றிதழ் நகல் தரலாம் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம், பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
this scheme implement school education it will be very useful.
ReplyDelete