ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது அமேசான் ப்ரைமில் உறுப்பினராக இணையும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தில் உறுப்பினராக இணைய ஆண்டுக்கு ரூ.999 வசூலித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.
அதன்படி ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களில் ரூ.499 அல்லது அதற்கும் அதிக விலையில் திட்டங்களை பயன்படுத்துவோர், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூ.1099 அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை ஒரு வருடத்துக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்த முடியும்.
அமேசான் பிரைம் வீடியோ சேவையில் 11 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள், பிரத்யேக தொடர்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டி.வி செயலி மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ள முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...