தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
இலவச பயிற்சி | சென்னை கலெக்டர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் மூலம்
இரண்டாம் நிலை காவலர்(ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்), இரண்டாம் நிலை
சிறைக்காவலர்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர்(ஆண்) போன்ற
பதவிகளுக்கு வருகிற மார்ச், ஏப்ரல் தேர்வு நடைபெற உள்ளது. இப்போட்டி
தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் கலந்து கொண்டு எளிதில்
வெற்றி பெற ஏதுவாக போட்டி தேர்வுகளுக்கான முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2
மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(பொது)
நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர் இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் அவர்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...