ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 8
நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான சம்பளம்
பிடித்து போக்குவரத்து கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்திருந்த
நிலையில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 4-ம் மாலை முதல் ஜனவரி 11-ம் தேதி வரை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் 8 நாட்களுக்கான ஊதியம் விடுப்பு எடுத்ததாகக் கூறி பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...