ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்றுஅவசரமாக சென்னையில்
கூடி ஆலோசித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க கட்டிடத்தில்
நடந்த கூட்டத்துக்கு இரா.தாஸ், அன்பரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசினர்.
கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்துஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் கூறியதாவது:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யும் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று கேட்பது, பொங்கல் போனஸ் கேட்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 6ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். மாவட்ட அளவில் 3ம் தேதி கூட்டங்கள் நடத்துவது, 9 மற்றும் 10ம் தேதிகளில் அனைத்து அரசியல் கட்சி சட்ட மன்ற, கட்சி தலைவர்கள், அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம்.
முன்னதாக 4ம் தேதி புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம்குறித்து கருத்தரங்கு நடத்த உள்ளோம். இதையடுத்து மதுரையில் உயர்மட்டக் குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அதற்கான தேதியை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு தாஸ் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...