உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறைந்த கட்டணத்தில் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உதான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சேலம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இந்நிலையில் தற்போது தஞ்சையிலிருந்து சென்னைக்கு முதன்முறையாக விமான சேவையை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளது.
அதே போல் கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னைக்கும், கர்நாடகா மாநிலம் ஹூப்ளியிலிருந்து சென்னைக்கும் விமான சேவை வழங்கப்படவுள்ளது. இதனை ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளது. வேலூரிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு டர்போ ஏவியேசன் நிறுவனம் விமான சேவை வழங்கவுள்ளது. ஸ்ரீநகரிலிருந்து கார்கிலுக்கு மேஏர் நிறுவனம் விமான சேவை வழங்கவுள்ளது.
தஞ்சை-சென்னை விமான சேவையால், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு, ஆறு மாத காலத்திற்குள் இந்த வழித்தடங்களில் விமான சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...