ஞாயிற்றுக் கிழமைகளில் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன்களில் இலவச அழைப்புச் சலுகை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, தனது நீண்டநாள் வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் சலுகைத் திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதற்கு முன்னரே 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைனில் அனைத்து அழைப்புகளும் இலவசம் என்ற சலுகைத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இச்சலுகை நிறுத்தப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முன்னதாக, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாகப் பேசும் சலுகைக்கான கால அளவை இரவு 10.30 முதல் காலை 6 மணி வரைக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மாற்றப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...