பிரிட்டன், சீனா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை எல்லாம் விஞ்சி, 'இன்டர்நெட் இல்லாத வாழ்க்கையைகற்பனை செய்து கூட பார்க்க முடியாது' என, 82 சதவீத இந்தியர்கள் கூறுகின்றனர்.
இன்டர்நெட் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என, ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 'இன்டர்நெட்' பயன்படுத்தும் இந்தியர்களில், 82 சதவீதம் பேர், அது இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது' என, கூறியுள்ளனர்.சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது:
உலக அளவில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான், மிக அதிகபட்சமாக, 46.2 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் வசதியை அதிகம் பயன்படுத்தும், 23 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இன்டர்நெட் வசதியில்லாமல் வாழ முடியாது
என, 82 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்.இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரேசிலைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள பிரிட்டன், 78 சதவீதத்துடன் இரண்டாவதுஇடத்தில் உள்ளது.
உலகிலேயே அதிக இன்டர்நெட் இணைப்பு உள்ள சீனா, 77 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், ஜெர்மனி, 4வது இடத்திலும், அமெரிக்கா, 5வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது ஆச்சரியமான விஷயமாகும். உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை கொண்டுள்ளது, இந்தியா. இந்த இளைஞர்கள்,
இன்டர்நெட் வசதி இல்லாத காலத்தை பார்த்ததே கிடையாது.மற்றொரு ஆச்சரியமான விஷயம், ஆசியாவிலேயே மிகவும் குறைந்த வேகத்துடன் கூடிய இன்டர்நெட் வசதியுள்ள நிலையில், இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதுதான்.
கடந்தாண்டில், உலகெங்கும் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை, 10 சதவீதம் உயர்ந்து உள்ள நிலையில், இந்தியாவில் அது, 28 சதவீதமாக உள்ளது.இந்தியா மற்றும் சீனாவில் மட்டும்
உலகின் மொத்த இன்டர்நெட் இணைப்புகளில், 49.8 சதவீதம் உள்ளது. அதாவது, உலகில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில், பாதி பேர் இவ்விருநாடுகளில் உள்ளனர்.
உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும், 357.8 கோடி பேரில், இந்தியாவின் பங்கு, 12.9 சதவீதம். தற்போது, 46.2 கோடி பேருடன், உலகில் அதிக இன்டர்நெட் இணைப்பு உள்ள நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வரும், 2021ல் இந்த எண்ணிக்கை, 63.58 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மொத்த மக்கள் தொகையில், 30 சதவீதம் பேருக்கு மட்டுமே இன்டர்நெட் வசதி கிடைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...