Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'

'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.
'டெண்டர்' விடுவதில், ஏற்பட்ட பிரச்னைகளால், 2016 - 17ம் கல்வியாண்டு முதல், லேப் - டாப்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதிய பின், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' உள்ளிட்ட, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. இத்தேர்வுகளில், தமிழக பாடத்திட்டத்தில் இல்லாத, பல்வேறு கேள்விகள் இடம் பெறுகின்றன.அதற்கேற்ப, அரசு பள்ளிகளில் பயில்வோர், தங்களை தயார்படுத்திக் கொள்ள, லேப் - டாப்கள் மிக அவசியம். அதற்காக, அவசர தேர்வாக கருதி, 70 ஆயிரம் பேருக்கு, இலவச லேப் - டாப்களை, விரைவில் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக, 
தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:நீட் தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் - டாப் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.
அதனால், இந்த கல்வியாண்டில் தரவேண்டிய, 5.43 லட்சம், லேப் - டாப்களில், முதல் கட்டமாக, 70 ஆயிரம் லேப் - டாப்களை, உடனடியாக கொள்முதல் செய்து, ஒரு மாதத்திற்குள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, புதிய, 'டெண்டர்' கோராமல், ஏற்கனவே, 'லேப் - டாப்'களை வினியோகித்துள்ள நிறுவனத்திடம், உடனடியாக கொள்முதல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




3 Comments:

  1. laptop mattum kudutthu enna use????, Govt - schools la Computer teacher illa!!!, Matric & CBSE -schools mathiri Computer Subject illa??!!!, appo ethukku laptop???, Proper- ana education illana, laptop kuda bomma than....

    ReplyDelete
  2. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்.

    ReplyDelete
  3. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive