மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி
7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும்
மேற்பட்ட டாக்டர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக்
கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ்
பட்டமேற்படிப்பிலும் பட்டய மேற்படிப்பிலும் (டிப்ளமோ) 23 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர்
சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம்
நடத்தப்படுகிறது.
ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் நீட்
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி
நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசு, தனியார் டாக்டர்கள்
சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு ஆன் லைன் மூலம் வரும் ஜனவரி
7-ம் தேதி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை,
சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது.
தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப் படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...