Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களை என்றும் சந்தித்ததில்லை. முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் கூறினர்.
அவர்கள் கூறும்போது, உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. இங்கு கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை. நீதித் துறையில் குளறுபடிகள் நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். நீதித்துறையில் சில விஷயங்கள் முறைப்படி பின்பற்றப்படவில்லை. இதுபற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எங்களுக்கு உரிய பதிலளிக்காமல் உதாசீனப்படுத்தும் வகையில் தலைமை நீதிபதி செயல்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்வது பற்றி நாடு சிந்திக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கற்பக விநாயகம் (ஓய்வு பெற்ற நீதிபதி):
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை என்றால் நீதிபதிகள் கொண்ட அமர்வில் பேச வேண்டும். நமக்கான பிரச்னைகளை நாமே பேசி அதற்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதால் என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? அரசியலில் அரசியல் இருக்கலாம். ஆனால் நீதித்துறையில் அரசியல் இருக்கக்கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இது போன்று இவர்கள் செய்வதால் ஏற்கனவே நீதித்துறையை குறை சொல்பவர்களுக்கு இது மேலும் சாதமாக அமைந்துவிடும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களை திரட்டுகிறார்களா? பிரச்னைகள் இருந்தால் பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ சந்தித்து முறையிட வேண்டும். இவர்களின் செயல் 10 மனைவிமார்கள் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களை அழைத்து எங்கள் கணவர்கள் சரியில்லை என்று கூறுவது போல் உள்ளது.
தமிழ்மணி (மூத்த வழக்கறிஞர்):
மிகுந்த மனவருத்ததில் உள்ளேன். இது மிக வேதனையான, ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம். உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை என்பதும் நீதிபதிகள் தன்னிச்சையாக நடந்துக்கொள்கிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக அங்குள்ள நீதிபதிகள் இரண்டு அல்லது மூன்று குழுக்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஒரு தரப்பினர் தலைமை நீதிபதிக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் எதிராகவும் செயல்பட்டு வந்தனர். இந்த விவகாரத்தை செய்தியாளர்களை அழைத்துச் சொல்வது என்பது அவர்களுக்கு மானக்கேடு. யார் குற்றம் சொல்கிறார்களோ அவர்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு தங்கள் மீது காரி உமிழும் செயல். ஒருவேளை அங்கு தவறு இருந்து அது பொறுக்க முடியாத அளவுக்கு இருக்குமேயானால் அவர்கள் குடியரசுத்தலைவர், பிரதமரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஊடகத்தை சந்தித்து கருத்து கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நாளை உச்சநீதிமன்ற நீதிபதி இந்த நால்வர் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார் என்றால் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive