கனரா வங்கியில் 450 புரொபேஷனரி ஆபீசர்ஸ் பதவியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, 450 புரொபேஷனரி ஆபீசர்ஸ் பதவியிடங்களை நிரப்ப உள்ளது.
ஜனவரி 1, 2018 அன்று வயது வரம்பு 20 முதல் 30-க்குள் இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின்கீழ் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள்பெற்று தேர்ச்சி பெற்றால் போதுமானது.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுஅடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும்31-ம் தேதியாகும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை பிப்ரவரி 20-ம் தேதிக்குப் பிறகு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வு மார்ச் 4-ம் தேதி நடைபெறும். இது குறித்து கூடுதல் விவரங்களை www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...