Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி 3ஜிபி/நாள்: ஏர்டெல், ஜியோவை ஒன்றுமில்லாமல் ஆக்கிய பிஎஸ்என்எல்.!

அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தொலைத் தொடர்பு துறையில் நடக்கும் கட்டண யுத்தத்திற்கு ஈடுகொடுக்குமொரு நிலைப்பாட்டில் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக திட்டங்களையும், சலுகைகளையும் மற்றும் கட்டண திருத்தங்களையும் (ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்காக) வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் அதன் எஸ்டிவி 1099 என்கிற வரம்பற்ற குரல் மற்றும் தரவு திட்டத்தை மறுசீரமைத்துள்ளது. அதென்ன திருத்தம்.? திருத்தத்திற்கு பிந்தைய நன்மைகள் என்ன.? பிஎஸ்என்எல் ரூ.1099/- ஆனது, முன்னதாக 30 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டிருந்தது. நன்மைகளை பொறுத்தமட்டில், எந்த வேக கட்டுப்பாடும் இல்லாத வரம்பற்ற தரவை வழங்கியது. தற்போது இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மிகவும் சிறந்த ஒப்பந்தமாக உருவெடுத்துள்ளது. இனி இந்த ப்ரீபெய்ட் எஸ்டிவி 1099 ஆனது வரம்பற்ற 3ஜி இணையம் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். அதாவது இந்த திட்டம் காம்போ சலுகையின்கீழ், அதன் பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி அளவிலான உயர் வேக டேட்டாவை வழங்கும். மேற்குறிப்பிட்டுள்ள நாள் வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 80கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் தொகுக்கப்பட்ட வரம்பற்ற அழைப்புகளையும் வழங்குகிறது. அதாவது வெளியேறும் ரோமிங் அழைப்புகளுடன் வரம்பற்ற இலவச உள்ளூர் / எஸ்டிடி அழைப்பு நன்மைகளை வழங்கும். உடன் வீட்டு வட்டம் மற்றும் ரோமிங் உட்பட செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஓன்றிற்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. கூடுதலாக, இந்த பிஎஸ்என்எல் திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலத்திற்கு இலவச பிஎஸ்என்எல் டியூனை அமைக்கும் விருப்பத்தையும் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. எல்லா வகையான நன்மைகளையும் வழங்கும் இந்த வரம்பற்ற இண்டர்நெட் திட்டமானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை. ஒப்பீட்டளவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற மற்ற தனியார் நிறுவனங்களானது, நாள் ஒன்றுக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை நீண்ட கால திட்டங்களாக வழங்கவில்லை. 3ஜிபி அல்லது 2 ஜிபி தினசரி தரவுப் பயன்பாட்டுடன் கூடிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களானது 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஜியோவின் 3ஜிபி/நாள் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் அதன் விலை நிர்ணயமோ ரூ.500/-வரை செல்கின்றது. மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனமும் கூட பிஎஸ்என்எல் அளவிற்கு சிறப்பான நன்மைகளை வழங்கவில்லை. ஏர்டெல் நிறுவனத்தின் 3 ஜிபி மற்றும் 3.5 ஜிபி/நாள் தரவுத் திட்டங்கள் முறையே ரூ.549/-க்கும் மற்றும் ரூ.799/-க்கும் கிடைக்கின்றன மற்றும் இரண்டுமே 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே இந்த போட்டியில் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் முன்னிலை வகிக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive