மின் வாரியம், காலியாக உள்ள, 350 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தி,
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 'கட் ஆப்' மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, கள உதவியாளர், இளநிலை உதவியார் உள்ளிட்ட, 10 பதவிகளில் காலியாக உள்ள, 2,175 இடங்களுக்கு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்தது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பணியிடங்களுக்கும், 2016 ஜூன் - ஆக., இடையே, எழுத்து தேர்வு நடந்தது. ஆனால், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், இளநிலை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு, நேர்காணல் நடத்த முடியவில்லை.மற்ற பதவிகளுக்கு, நேர்காணல் உட்பட, அனைத்து பணிகளும் முடித்து, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை உதவியாளர் நிர்வாகம் ஆகிய, 350 பதவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
இதற்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உள்ளோர், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.நேர்காணல் முடிந்ததும், எழுத்து, நேர்காணல், கல்வி தகுதி ஆகியவற்றில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில், இடஒதுக்கீட்டின்படி, ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர். தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கும், விரைவில் நேர்காணல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...