பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண்
குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு
முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி : மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து...
முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தில், மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும், ஜன., 31ம் தேதிக்குள், 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாத இறுதி : பல்கலை அளவில் தரம் பெற்ற மாணவர்கள் மற்றும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும், இம்மாதம் இறுதிவரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...