பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர் கால்குலேட்டர் கொண்டு வரலாம் என நேற்று (ஜனவரி 3) அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “பிளஸ் 2
வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம்
தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி
வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 மாணவர்களில் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள்
‘லாக்ரதம் டேபிள்’ புத்தகம் கொண்டுவர வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு
எழுதுவோர் முழு கிராப் பேப்பரும் கொண்டுவர வேண்டும். புள்ளியியல் தேர்வு
எழுதும் மாணவர்கள் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு
சாதாரண ‘கால்குலேட்டரும்’, இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு ‘லாக்ரதம்
டேபிள்’ புத்தகமும் கொண்டு வர வேண்டும். அதேபோல் வர்த்தகக் கணிதத் தேர்வு
எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்” எனத்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுவரை மாணவர்கள் தேர்வறைக்குள் கால்குலேட்டர் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...