தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத்
தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு
பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பொதுத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும்
ஆசிரியர்களுக்கு ஊதியத்தை, தாள் ஒன்றுக்கு தலா 7.50 ரூபாயில் இருந்து 10 ஆக
உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
கழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதன் எதிரொலியாக, 17.3.2016ல்
ஊதியத்தை உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் தேர்வு மைய
கண்காணிப்பாளருக்கு மட்டும் 2003ம் ஆண்டு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்ட,
பழைய தொகை நிர்ணயித்து, அரசாணையில் இடம் பெற்றது. இதன்படி தலா 10 ரூபாய்
என்பதற்கு பதில், 3.50 ரூபாய் என தவறாக இடம் பெற்றது. இதையடுத்து
ஒட்டுமொத்தமாக ஊதிய
உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. திருத்தப்பட்ட உத்தரவு வெளியிட வேண்டும் என, ஆசிரி
யர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரி
யர்கள் கழகம் மாநில பொது செயலாளர்
பிரபாகரன் கூறியதாவது:
கல்வி அதிகாரிகளால், 2016ம் ஆண்டு உத்தரவில் கவனக்குறைவாக 2003ம் ஆண்டு உத்தரவு விவரங்கள் இணைக்கப்பட்டது. இதை திருத்தி வெளி
யிட்டால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன
டைவர். அதிகாரிகள் இதில் அக்கறை காட்டவில்லை. இதை கண்டித்து பிப்.,1 முதல்
13 வரை நடக்கும் பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்கும் திட்டம் உள்ளது.
கல்வி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்,
இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்.
ReplyDelete