நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான
நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்ப
வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ
இதனிடையே, நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும்
இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள்
வெளியாகின. ஆனால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வில்
பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம்
ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம்
கொடுத்துவிட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்
படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம்
தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க
வேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்ற
போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய
நிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள்
உள்ளனர்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும்
கருத்தில் கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாநில
பாடத்திட்டங்களையும் இணைப்பது குறித்து மத்திய
அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு
எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...