தமிழகத்தில் சேலம் உள்பட 8 மாவட்டங்களைச்
சேர்ந்த 21.88 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதற்கான போலியோ சொட்டு மருந்துகள் நேற்று(ஜனவரி 9) சேலத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.*
நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க இந்த மருந்து வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டுதோறும் இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டின் முதற்கட்ட முகாம் வரும் ஜனவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்ட முகாம் மார்ச் 11ஆம் தேதியும் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான சொட்டு மருந்து அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குத் தேவையான போலியோ சொட்டு மருந்துகள், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, நேற்று கொண்டு வரப்பட்டது. சேலத்திற்கு வந்த இந்த மருந்துகள், வானங்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 21,87,800 குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
"சேலம் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 822 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 2,298 சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலியோ சொட்டு மருந்து வழங்குதல் பணிகளில் 9,914 பேர் ஈடுபடுவார்கள்" என மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர், பூங்கொடி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...