Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம்

அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
 
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. 
இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. 
குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




4 Comments:

  1. unmaiyana newsa

    ReplyDelete
  2. unmaiyana newsa

    ReplyDelete
  3. sir tet varuma illai trb varuma? yerkanavey tet eluthiyavarkaluku posting poduvankala please soulunga sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive