கல்வித்துறையில் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதால் 120 கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டாக
நிரப்பப்படவில்லை. இதனால் நிர்வாக பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் இத்துறையின் கீழ் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ல் பேனல் (பணிமூப்பு பட்டியல்) வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். இரு ஆண்டுகளாக பேனல் வெளியிடாததால் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உதவியாளர், இருக்கை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: மாநிலத்தில் 120 கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. பதவி உயர்வு அளிக்கப்பட்டால் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். இப்பதவி உயர்வு மார்ச் 15ல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அதற்கான பேனல் கூட வெளியிடப்படவில்லை.
குறிப்பிட்டபடி மார்ச் 15 பதவி உயர்வு கிடைத்திருந்தால் சம்பளத்தில் பணப் பலன் 12 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்திருக்கும். அதிகாரிகள் குளறுபடியால் பணப் பலன் பலருக்கும் கிடைக்க வில்லை. 2018 க்கான பேனல் வெளியிடும் காலம் வந்துவிட்டது. போராட்டங்களில் ஈடுபடும் முன் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இணை இயக்குனர்கள் மாற்றம் காரணமா: அமைச்சு பணியாளர்கள் பேனல்,
பதவி உயர்வு போன்ற பணிகளை கல்வித்துறை இணை இயக்குனர்
(பணியாளர் தொகுப்பு) கண்காணிக்கிறார். கடந்த 15 மாதங்களில் இப்பணியில்
இருந்த நரேஷ், சேதுராமவர்மா, பாஸ்கரசேதுபதி, சசிகலா என குறுகிய
காலங்களில் அடுத்தடுத்து பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டனர்.
இதுபோன்ற நடவடிக்கையால் தான் பதவி உயர்வு வழங்கமுடியாமல்
போய்விட்டதாக அமைச்சு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேநேரம் தற்போதுள்ள இணை இயக்குனர் குப்புசாமியாவது இதில்
சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என எதிர்பார்க்கின்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...