மத்திய
அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 4.12 லட்சம் இடங்கள்,
அதாவது, 11 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியிடங்கள் குறித்த
அறிக் கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2013 மார்ச், 1 நிலவரப்படி, ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தன. அது, 2014 மார்ச், 1ல், 4.21 லட்சமாக குறைந்தது. 2016 மார்ச், 1 நிலவரப்படி, இது, 4.12 லட்சமாக இருந்தது. மொத்தம் ஒதுக்கப்பட்ட மத்திய அரசு பணியிடங்கள், 36.34 லட்சம். அதில், 4.12 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. அதாவது, மொத்தம் ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 11 சதவீதம் காலியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...