நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு மார்ச் மாதம் நடக்க உள்ளது.
அதையொட்டி, நேரடியாக பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, தேர்வுத்துறை, தத்கல் திட்டத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, கால அவகாசம் வழங்கி உள்ளது.
அதன்படி, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ள பிளஸ் 1 தனித்தேர்வர்கள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் இன்று முதல், 19 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது முதன்மை கல்வி அலுவலகம், சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...