மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை
தீர்த்து வைப்பீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு
பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ரிஷபம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம்
அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில்
தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு
நீங்கும். புது நட்பு மலரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில்
சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கடகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க
வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது
நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில்
எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
சிம்மம்
கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதரங்கள் சாதகமாக
இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி
மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை
நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
துலாம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட
நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல
செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின்
நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
விருச்சிகம்
தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வர
வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
தனுசு
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாசமழைப் பொழிவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த
வேலைகள் முடியும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள்
ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள்.
கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால்
நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட
வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மீனம்
எடுத்த காரியத்தை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும்.
பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை
நீடிக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது
முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...