மேஷம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்
கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும்.
உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில்
ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள்
அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வேற்றுமதத்தவர் உதவுவார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில்
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி
பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கன்னி
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மரியாதைக்
கூடும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து
நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம்
வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது
அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகக
வசதிப் பெருகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில்
உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள்.
உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
மகரம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகமாகும்.
கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ
அறிவை பயன்படுத்துவது நல்லது. கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில்
அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கும்பம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர
வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
செய்வீர்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம்
கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.
பணவரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...