மேஷம்
காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து
செல்லும்.
பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள்
உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில்
மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ரிஷபம்
காலை 7.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள்
அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச்
சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்துக்
கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மிதுனம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழியில்
நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம்
சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கலந்தாலோசித்து சில
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு
லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
சிம்மம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட
நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி
கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
கன்னி
சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்கள்
திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்
லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
துலாம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
விருச்சிகம்
காலை 7.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட
வேண்டாம். கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத
உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால்
நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
தனுசு
காலை 7.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க
முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும்.
மூலம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு
அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
மகரம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின்
உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட
வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கும்பம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள்
நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த
ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள்
நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த
ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...