மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது.
திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக
சமாளிப்பீர்கள்.
பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்
போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ரிஷபம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயார்
ஆதரித்துப் பேசுவார். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தொழிலில்
லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை
நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கடகம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி
நடத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில
காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது
வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
கன்னி
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு
கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முகப்பொலிவுக் கூடும்.
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்
கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில்
சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது
ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு
மனஉளைச்சல் ஏற்படும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம்,
எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில்
கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
தனுசு
கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அநாவசியச் செலவுகளை
குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில்
வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்
வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
மகரம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்,
செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரம் செழிக்கும்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கும்பம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து
பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில்
தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மீனம்
கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில்
புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...