Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 15.12.2017

மேஷம் பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். இரவு 8.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்-. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்  

மிதுனம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கடகம் எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை  

சிம்மம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் 

கன்னி கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு  

துலாம் இரவு 8.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் 

விருச்சிகம் குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

தனுசு திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்  

மகரம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே 

கும்பம் குடும்பத்தில் ஒற்றுமைப் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன சில வேலைகள் இன்று முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்  

மீனம் இரவு 8.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive