தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு (சி.இ.ஒ) ஊதியம் கொடுப்பதில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறித்து புளூம்பெர்க் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 22 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையில், ’அமெரிக்காவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிகளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்குத் தோராயமாக ஆண்டுக்கு 14.3 மில்லியன் டாலர் வரை ஊதியம் வழங்குகின்றன.
ஊதிய விகிதத்தில் அமெரிக்கா 265 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாக இந்தப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா இந்தப் பட்டியலில் 229 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தோராயமாக ஆண்டுக்கு 1.5 மில்லியன் டாலர் ஊதியத்தை இந்தியா வழங்குகிறது. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து 201 புள்ளிகளையும், தென்னாப்பிரிக்கா நான்காவது இடத்தில் 180 புள்ளிகளையும் நெதர்லாந்து 171 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. சுவிட்சர்லாந்து, கனடா, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன. சீனா தோராயமாக 1.9 மில்லியன் டாலர் வழங்குகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...