பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று (டிசம்பர் 18) அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்திவருகின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்கீழ் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் உட்பட 350 தொலைதூரக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்வி மையங்களில், பணம் பெற்றுக்கொண்டு மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கப்படுவதாகவும், விடைத்தாள்களைத் திருத்துவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 8ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தரத்தில் மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்காக வழங்கப்படும் அந்தஸ்து மற்றும் நிதிக்காக விண்ணப்பிக்க, கோவை பாரதியார் பல்கலை தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...