புளூட்டோ கிரகத்தில் பனிக்கட்டி பரப்பில்
தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் பல்வேறு கிரகங்களில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக சூரிய மண்டலத்துக்கு அடுத்ததாகவுள்ள புளூட்டோவில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் தற்போது புளூட்டோவில் உள்ள பனிக்கட்டி பரப்பில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,எங்களுடைய ஆய்வில் புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று அதிகமாகத் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிரமாக ஆய்வு செய்ய தொடங்கியுள்ளோம். இதேப் போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புளூட்டோ மற்றும் நெப்டியூன் கிரகங்களில் துணை கிரகங்களின் புவியீர்ப்பு விசைச் சக்தியால் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பம் ஏற்பட்டு அதில் உள்ள ஐஸ்கட்டிகள் உருகி கடல் போன்று தண்ணீர் உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது அங்குத் தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் வாழ்வதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்த தீவிரமான ஆராட்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...