தனியாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும்
மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் Metro SecuCare என்ற புதிய செயலியை
வெளியிட்டுள்ளது.
இது குறித்து மும்பை மெட்ரோ ரயில் முதன்மை நிர்வாக அலுவலர் அபே குமார் மிஸ்ரா கூறுகையில், Metro SecuCare என்ற செயலியின் மூலம், பயணிகள் இருக்கும் சரியான இடத்தை, ஜிபிஎஸ் மூலம் கண்டறியலாம். நாம் இருக்கும் இடத்தை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருமுறை ஜிபிஎஸ் புதுப்பித்துக் கொள்ளும்.
இதனால் நமக்கு ஆபத்து ஏற்படும்போது நாம் கொடுக்கும் தகவலும், நாம் இருக்கும் இடத்த்தின் பெயரும் ஜிபிஎஸ் மூலம் அவசர உதவி மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
தகவல் கிடைத்த உடனே அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு தாக்குதல்களைத் தடுக்க முடியும். பெற்றோருக்கும் தகவலைத் தெரியப்படுத்த முடியும். இந்தச் செயலி பிளே ஸ்டோர் மற்றும் ஐ ஸ்டோரிலும் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
செயலி: Metro SecuCare
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...