மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப்
பொறுப்பேற்றது முதல் தற்போது வரை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பின்னடைவையே
சந்தித்துள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை 2019ஆம் ஆண்டு சந்திக்கவுள்ள
நிலையில் அந்தத் தேர்தலுக்கு முன்னதாக அமலாகும் இறுதி பட்ஜெட் 2018ஆம்
ஆண்டு தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக் கொள்கைக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் 'வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார, சமூக மற்றும் பணியாளர் கொள்கை வகுக்கப்படும். முறைசார் துறைகளில் பணியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு போன்றவை உறுதி செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 30 இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இது சீனாவை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது; ஆனால் அதற்கு நேர்மாறாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இருந்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் வேலைவாய்ப்பு உருவாக்கம் கவலையளிக்கும் விதமாக உள்ளது என்றும் இந்த நிலையை மாற்றச் சீரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Paaklam pa yana pandraaganu
ReplyDelete