இந்தியாவில் உள்ள அனைத்து
மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் தமிழகம் விளங்குவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 208 பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாகத் தமிழகத்தில் மட்டும்தான் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்குத் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது” என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் சாதனைகளை நீங்களே செஞ்ச மாதிரி பேசறீங்க. உங்களின் உண்மையான சாதனை அரசு பள்ளி மாணவன் தரமான உயர் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் படிப்பது.
ReplyDelete