வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு தரப்பட்டுள்ளது.
11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.
அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...