சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
சென்னை பல்கலையின் பதிவாளர் சீனிவாசன் நேற்று முன்தினம் (டிசம்பர் 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலமும், ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலமும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வேலை நாள்களிலும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை ideonlineadm@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...