தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர்
பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இரு நாட்டின்
ஒப்பந்தம் அடிப்படையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைத்து
மாநிலங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில்
இருந்து 96 மாணவர்கள், 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக
தமிழக கல்வித் துறையில் ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியரை தேர்வு செய்யும் பணி
நடக்கிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு நாட்டின் கலாசாரம்,
பண்பாடு, கல்வி முறை குறித்து தெரிந்து கொள்வதற்கு திட்டம் வகை
செய்துள்ளது. மாணவர்கள் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவராகவும்
அதிக மதிப்பெண் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஆங்கில புலமையும், தேசிய
மற்றும் ஊரக திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்று உதவி தொகை பெறுபவராகவும்,
பாஸ்போர்ட்
பெற்ற மாணவராகவும் இருக்க வேண்டும். ஆசிரியரை பொறுத்தவரை அவர் முதுகலை பிரிவில்
ஆங்கிலம் நன்கு தெரிந்து, மத்திய நல்லாசிரியர் விருது பெற்றவராகவும், ஜப்பானுக்கு இதுவரை செல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு தலா 32 ஆசிரியர், மாணவர் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் தயாரித்து, அதில் இருந்து தமிழகம் சார்பில் ஐந்து மாணவர், ஒரு
ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு வரும் ஏப்., அல்லது மே மாதத்தில் ஜப்பான் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். இதுபோல் ஜப்பானில் இருந்தும் ஆசிரியர், மாணவர்கள் இந்தியா வரவுள்ளனர், என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...