அல்ப
காரணங்களுக்காக பி.எப். பணத்தை முழுவதுமாக எடுத்து விடக்கூடாது. அதனை
சேமிக்க வேண்டும் என சந்தாதாரர்களுக்கு இ.பி.எப். கமிஷனர் அறிவுரை
கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்துள்ள பணம் முழுவதையும் எடுத்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்
பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு
நிதி கூடுதல் கமிஷனர் ரங்கநாத் கூறியது.பி.எப். சந்தாதாரர்கள் தங்கள்
வருங்கால வைப்பு நிதி முழுவதையும் அல்ப காரணங்களுக்காக வழித்து துடைத்து
எடுத்து விடுகின்றனர். இது உங்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பு என்பதை உணர
வேண்டும். பணத்தை எடுப்பதால் நீங்கள் இழப்பது சேமிப்பை மட்டுமல்ல
ஒய்வுக்கு பின்னர் உங்களின் சமூக பாதுகாப்பையும் இழக்கிறீர்கள். எனவே
உங்கள் சேமிப்பை ஒய்வு வரை தொடர்வது தான் நல்லது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...