மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இவறறின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.
முறைகேடுகளை
தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில்
கூறப்படுகிறது.வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல்
பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் ஆகிய ஆறு சேவைகளை ஆதார்
எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான
கடைசி தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இணைப்பது?
பான் கார்டு: ஆதாருடன் பான் கார்டை இணைக்க
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html
என்ற இணையதளத்தில் பான்கார்டு, ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து
இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : வருமான வரி தாக்கல் செய்ய இயலாது
வங்கிக்கணக்கு
கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஆதார் எண்ணை வழங்கி இணைக்கலாம் அல்லது
இன்டர்நெட் பேங்கிங்,மொபைல் பேங்கி்ங் மூலம் ஆதார் அப்டேட் லிங்கை கிளிக்
செய்து இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு
முடக்கப்படும்
மியூச்சுவல் பண்ட்சி.ஏ.எம்.எஸ் மற்றும் கார்வி கம்ப்யூட்டர்ஷேர்
இணையதளங்கள், உங்கள் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க
உதவுகிறது.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்குகள்
நிறுத்தப்படும் இன்சூரன்ஸ் பாலிசிஇன்சூரன்ஸ் பாலிசிகளை இணைப்பதற்கு அந்தந்த
நிறுவன கிளைகளுக்கு நேரடியாக சென்று, பாலிசி எண், பிறந்த தேதி, ஆதார் எண்
வழங்கி இணைக்கலாம்.
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ், மேக்ஸ்
இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 'ஆன்லைன்' மூலம் இணைப்பதற்கு வசதிகளை
ஏற்படுத்தியுள்ளது.
கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : காப்பீட்டு திட்டங்களை தொடர
முடியாது தபால் திட்டங்கள்தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள்,
ஆதாரை இணைப்பதற்கு, இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருக்கும் கிளையில்
வழங்குவதன் மூலம் இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை :
கணக்கு முடக்கப்படும்
அலைபேசி எண்தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு
சென்று, அலைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம். கடைசி தேதி : 2018 பிப்.,
6நடவடிக்கை : அலைபேசி எண் செயலிழக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...