மக்கள் நல்வாழ்வுத் துறையில் சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள்
ஆகியோருக்கு விரைவில் பணி ஆணையம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், “மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மருத்துவத் துறையில் தொடர்ந்து பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறையில் சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் ஆகியோருக்குப் பணி ஆணையம் வழங்கப்பட உள்ளது. இதில் 110 சித்த மருத்துவர்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 2ஆம் தேதி முதலமைச்சரால் பணி ஆணையம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 333 மருந்தாளுனர்களுக்கும், 1,234 லேப் டெக்னீஷியன்களுக்கும் குறுகிய காலத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...