வாடகையில்லா தொலைப்பேசி சேவை,கேபிள் டி.வி மற்றும் இணைய வசதியை வருமாண்டு டிசம்பர்
மாதம் முதல் மானிய விலையில் ஃபைபர் இணைப்புத் திட்டத்தின் கீழ் வழங்க
ஆந்திரப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கூகுள் எக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தொலைதூரக் கிராமங்களிலும் இணைய இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக் குடும்பங்கள், 50,000 பள்ளிகள், 10,000 அரசு அலுவலகங்கள், 5,000 சுகாதார மையங்கள் மற்றும் அனைத்துப் பஞ்சாயத்து அலுவலகங்கள் பயன்பெறும். தற்போது ரூ.333 கோடி செலவில் ஒரு லட்சத்துக்கும் மேலான இணைப்புகள் வழங்கப்பட்டதுடன் மொத்தம் ரூ.4,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாதம் முழுவதும் ரூ.149 கட்டணத்தில் அதிவேக இணைய வசதி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக 16 ஒருங்கிணைந்த மாவட்டக் கட்டுப்பாடு மையம், 20,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் டேட்டா மையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் கண்காணிக்கப்படும். மொத்தம் 13 மாவட்டங்களில் 55,000 கிலோமீட்டர் நீள ஆப்டிகல் ஃபைபர் கேபிளில் 23,000 கிலோமீட்டர் நீளம் வரை இதுவரையில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...