அரசு
பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி
உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.
குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு;
முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.
புகார் மீது வழக்குபதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
Very good ithae pola pg trb 2017 OMR sheet verify panna innum pala umai velivarum saivergala??????
ReplyDeletePg trb select anavanga OMR sheet scan panni mark unmaiyai ariyalamae please do it past
ReplyDeletePg trb select anavanga OMR sheet scan panni mark unmaiyai ariyalamae please do it past
ReplyDeleteI support your suggestions
ReplyDeleteDo it for PG TRB.
ReplyDelete