உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் ஃபேஸ்புக் நிறுவனம் ‘லைவ் கேமிங்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு பயனர்கள் பயன்பாட்டுக்காக புதிய கேம்களை ஆன்லைனில் விளையாடுவதற்காக மெசஞ்சர் அப்ளிகேஷனில் இன்ஸ்டன்ட் கேம் வசதியை வழங்கியது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் வெளியான சில அப்டேட்களுக்கு பின்னரே இந்த கேம்களை பயனர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர். அதில் போக்கிமான், ஆங்ரி பேர்டு, செஸ் மற்றும் பசில் என பலவிதமான கேம்கள் வழங்கப்பட்டுள்ளன. நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வகையில் இந்த கேம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியிட்ட புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் விளையாடும் கேம்களை தங்களின் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பதிவிட முடியும். எனவே நமது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இந்த கேம்களை விளையாட முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த வீடியோக்களை தனியே ரெகார்டு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே லைவ் வீடியோ பதிவிட முடியாத நபர்கள், பின்னர் அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோக்களை பதிவிட்டுக் கொள்ளலாம்.
words with friends என்ற வசதியின் மூலம் பயனர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போதே அவர்களின் நண்பர்களுடன் வீடியோ சாட் செய்துகொள்ள முடியும். ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட சில கேம்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...