நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 43 லட்சம் பேர் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 ஆக குறைந்துள்ளது. ஒரு லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னையை தொடர்ந்து மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்கள் உள்ளன. பெங்களூரு 5 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் தலைநகர் டில்லி முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...