அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை
ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
''தற்போது வடகிழக்குமற்றும் கிழக்கு பகுதியில் இருந்து
குளிர்ந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வீசிவருகிறது. அதனால் மழை மேகங்கள்
உருவாவது தடைபட்டு, மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்நிலையில் தெற்கு
அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகியுள்ளது.
இதன் தாக்கத்தால் இப்போதைக்கு தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை. அந்த காற்றழுத்ததாழ்வுநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது'' என்று அதிகாரிகள்கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...