இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று (டிசம்பர் 15) ஒப்புதல் அளித்துள்ளது.
1934ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1933இன் படி, மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டது. மருத்துவக் கல்வியை ஒழுங்கு முறைப்படுத்தவும், மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஊழல் நடைபெறுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனவே, அதைச் சீர்திருத்தவும், மருத்துவ சுற்றுச்சூழலை முழுமையாக சரிசெய்யும் வகையிலும் ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையம் என்கிற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 60%இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்தக் கல்லூரிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். 40% இடங்களுக்கான கட்டணத்தைத் தேசிய மருத்துவ ஆணையம் தீர்மானித்துக் கொள்ளலாம். மருத்துவப் படிப்பை முடித்தவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் பணியாற்ற முடியும்.
நிதி அயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனாகரியா தலைமையில் சுகாதாரத் துறைச் செயலர் பிபி சர்மா, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், பிரதமரின் கூடுதல் சிறப்பு செயலர் பிகே மிஸ்ரா ஆகிய 4 பேர் அடங்கிய குழு இந்த மசோதாவைத் தயாரித்துள்ளது.
இந்த மசோதாவின் படி,தேசிய மருத்துவ ஆணையம், அமைச்சரவைச் செயலகத்தின் கீழ் உள்ள குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாங்கத்திற்காக நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமையிலான 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மேலும், மருத்துவ துறையில் இருக்கும் திறமையானவர்கள், மருத்துவதுறை வல்லுநர்கள் அதில் இடம் பெறுவார்கள்.
கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நிர்வகிப்பதை எளிதாக்குவதே தேசிய மருத்துவ ஆணைய மசோதாவின் நோக்கம் என சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...