உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.
மேலும், ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய ரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. ரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று இன்று தெரிந்து கொள்வோம்…
ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட்:
இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு ரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் அத்துடன் இது ஒரு சிறந்த, ரத்த சுத்திகரிப்பு உணவுப் பொருள். ஆகவே இதனை உடல் பருமன் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் ரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.
கீரைகள்:
காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக் கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் ரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள், செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும். இரும்புச்சத்து என்பது, உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து, எலும்புகளை வலுவாக்குவதுடன், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால், அனீமியா நோயானது வரும். ஆகவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கிறது.
பாதாம்:
மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச் சத்தானது கிடைக்கும். அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால், உடலில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக பாதுகாக்கும்.!
அடிக்கடி இந்த மாதிரி விழிப்புணர்வு செய்தி தேவை நம் மக்களுக்கு...நன்றி பாடசாலை..
ReplyDelete1 அவுன்ஸ் என்றால் எவ்வளவு?
ReplyDelete